அஜித்தின் பிறந்த நாளில் விக்னேஷ் சிவன் போட்டோ வெளியிட்டுள்ளார்.

Vignesh Shivan Wishes to Ajith Birthday : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் இறுதியாக துணிவு திரைப்படம் வெளியானதை தொடர்ந்து லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருந்த படத்தில் நடிக்க இருந்தார்.

ஆனால் திடீரென விக்னேஷ் சிவன் இந்த படத்திலிருந்து வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி ஒப்பந்தமானார். இவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு விடா முயற்சி என தலைப்பிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு நள்ளிரவு வெளியானது.

இந்த நிலையில் அஜித்தின் பிறந்தநாள் என்பதால் இயக்குனர் விக்னேஷ் சிவன் என்னை அறிந்தால் படத்தின் போது அஜித்துடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை வெளியிட்டு அஜித்துக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

மேலும் என்றும் அன்பு நிரந்தரம் என தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.