vignesh shivan tweet

Vignesh Shivan Tweet : 

இவர் தான் நாட்டை ஆள வேண்டும். இவர் நாட்டை ஆள்வதை பார்க்க காத்துக் கொண்டிருக்கிறேன் என கூறி விக்னேஷ் சிவன் புகைப்படத்தை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் விக்னேஷ் சிவன்.

இயக்குனர் என்பதையும் தாண்டி பாடலாசிரியர், நடிகர், கிரிக்கெட்டில் ஈடுபாடு கொண்டவர் என பல திறமைகளை கொண்டவர்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலயான மகேந்திர சிங் தோனியின் தீவிர ரசிகரும் கூட. நடந்து வரும் T-20 போட்டியில் தோனியின் பெயர் இடம் பெறாததை பற்றி கூட காட்டமாக ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் தோனியை சந்தித்துள்ளார். அந்த புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த டீவீட்டில் தன்னுடைய வாழ்நாள் கனவு நிறைவேறி விட்டது. இவர் தான் நாட்டை ஆள வேண்டும். அதை காண காத்திருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.