Vignesh Shivan

Vignesh Shivan : நயன்தாரா விஷியத்தில் விக்னேஷ் சிவன் ட்வீட் செய்ததை பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவை கொலையுதிர் காலம் இசை வெளியீட்டு விழாவில் ராதா ரவி கொச்சையாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

திரையுலக பிரபலங்கள் பலரும் ராதா ரவியை விமர்சனம் செய்து வறுத்தெடுத்து வருகின்றனர். இயக்குனரும் நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவனும் ராதா ரவியை விமர்சித்து ட்வீட் செய்திருந்தார்.

விக்னேஷ் சிவனின் டீவீட்டிற்கு பலரும் ஆதரவு அளித்து வந்தாலும் ஒரு சிலர் விக்னேஷ் சிவனை திட்டியும் வருகின்றனர்.

நாயகியான வாணி போஜன் – முதல் படமே இந்த நடிகருடன் தான்.!

காரணம் மீ டூ, பொள்ளாச்சி விவகாரங்களில் பேசாத நீங்கள் காதலிக்கு ஒன்னுனா மட்டும் குரல் கொடுப்பீர்களா ? உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தம் மத்தவங்களுக்கு தக்காளி சட்டினியா என விமர்சனம் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here