அஜித் படம் பற்றிய கேள்விக்கு கோபமாக பதிலளித்துள்ளார் விக்னேஷ் சிவன்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். நானும் ரவுடிதான் என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களை இயக்கி வருகிறார்.

இறுதியாக இவர் இயக்கிய காத்து வாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து அஜித்தின் 62 வது படத்தை இயக்க ஒப்பந்தமானார்.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாக இருந்த இந்த படத்தில் இருந்து திடீரென விக்னேஷ் சிவன் விலக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது அஜித் படம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு விக்னேஷ் சிவன் இது தேவையில்லாத கேள்வி வேறு ஏதாவது கேள்வி கேளுங்கள் பதில் அளிக்கிறேன் என கூறியுள்ளார். மேலும் ரெட் ஜெயன்ட் தயாரிப்பில் படம் இயக்குகிறீர்களா என கேட்க இது irrelevant கேள்வி என கூறியுள்ளார்.

விக்னேஷ் சிவன் கோபமாக அளித்த இந்த பதில்கள் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கருத்து கூறி வருகின்றனர்.