ஆஸ்கார் விருது

ஆஸ்கார் விருது குடுப்பீங்களா? என இயக்குனர் விக்னேஷ் சிவன் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் வெளியாகி இருந்த படம் ராட்சசன்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று சாதனை படைத்தது. மேலும் திரையுலக பிரபலங்கள் பலரின் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட இந்த படத்தை பாராட்டி இருந்தார். இதனை விஷ்ணு விஷாலும் இயக்குனர் ராம் குமாரும் ட்விட்டரில் கூறி இருந்தனர்.

இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் இந்த படத்தை பாராட்டியது மட்டுமில்லாமல் ஆஸ்கார் விருது குடுப்பீங்களா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.