
Vignesh Shivan Next :
விக்னேஷ் சிவன் இயக்க உள்ள அடுத்த படத்தை பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழ் சினிமாவில் நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பல திறமைகளுடன் வலம் வருபவர் விக்னேஷ் சிவன்.
இவர் இதுவரை நானும் ரவுடி தான், போடா போடி, தானா சேர்ந்த கூட்டம் என ஹிட் படங்களாக கொடுத்து வருகிறார்.
ரசிகர்களால் அன்பான இயக்குனர் என அழைக்கப்பட்டு வரும் விக்னேஷ் சிவன் இயக்க உள்ள அடுத்த படத்தை பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த படத்தில் நாயகனாக சிவகார்த்திகேயன் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியானால் யார் ஹீரோ என்பது உறுதியாக தெரிந்து விடும்.
லைகா நிறுவனம் தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2, சிம்புவின் வந்தா ராஜாவாக தான் வருவேன் ஆகிய படங்களை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.