தமிழக முதல்வரை சந்தித்து திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுத்துள்ளனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா.

Vignesh Shivan Nayanthara With MK Stalin : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் நடிகை நயன்தாராவை காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

தமிழக முதல்வரை சந்தித்த விக்னேஷ் சிவன், நயன்தாரா - வைரலாகும் போட்டோஸ்

இருவருக்கும் ரகசிய நிச்சயம் நடந்து முடிந்த நிலையில் வரும் ஜூன் 9-ம் தேதி இவர்கள் திருமணம் கோலாகலமாக நடக்க உள்ளது. அதற்காக திரையுலக பிரபலங்கள், நண்பர்கள் வட்டம், என அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுத்து வருகின்றனர்.

தமிழக முதல்வரை சந்தித்த விக்னேஷ் சிவன், நயன்தாரா - வைரலாகும் போட்டோஸ்

அந்த வகையில் தற்போது இருவரும் இணைந்து முதல்வர் மு. க ஸ்டாலின் அவர்களை சந்தித்து ‌ திருமணத்திற்கு வரவேற்றுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.