
ஏகே 62 படத்தில் இருந்து விலகியதை உறுதி செய்துள்ளார் விக்னேஷ் சிவன்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் இறுதியாக எச் வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டை வெற்றி பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து அஜித் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் திடீரென விக்னேஷ் சிவன் இந்த படத்தில் இருந்து விலக்கப்பட்டதாக சொல்லப்பட்டு வந்தது.
இதுவரை இது பற்றி எதுவும் பேசாமல் இருந்து வந்த விக்னேஷ் சிவன் தற்போது இந்த படத்தில் இருந்து விலகி இருப்பதை மறைமுகமாக உறுதி செய்துள்ளார். அதாவது விக்னேஷ் சிவன் தன்னுடைய ட்விட்டர் பக்க பயோவில் தன்னுடைய படங்கள் பற்றி குறிப்பிட்டு இருந்த இடத்தில் ஏ கே 62 எனவும் இடம்பெற்றிருந்தது.

ஆனால் தற்போது ஏகே 62 என்ற பெயரை மட்டும் அவர் நீக்கியுள்ளார். இதன் மூலம் அவர் படத்திலிருந்து விலகியது உறுதியாகியுள்ளதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.