Vignesh Shivan Birthday Celebration With Nayanthara
Vignesh Shivan Birthday Celebration With Nayanthara

கோவா பீச் ஓட்டலில் காதலின் பிறந்தநாளை படு ரொமாண்டிக்கான கொண்டாடியுள்ளார் நயன்தாரா.

Vignesh Shivan Birthday Celebration With Nayanthara : தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது இயக்குனரும் பாடலாசிரியருமான விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் சேர்ந்து வெளிநாடுகளில் சுற்றித் திரிந்து வருகின்றனர். சமீபத்தில் ஓணம் பண்டிகையின் போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கேரளா சென்று நயன்தாரா அம்மாவுடன் சேர்ந்து பண்டிகையை கொண்டாடினர்.

இந்த நிலையில் இன்று காதலன் விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் என்பதால் இருவரும் கோவா சென்று பீச் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் படு ரொமாண்டிக்காக பிறந்த நாளை கொண்டாடி உள்ளனர்.

OMG..செம்பருத்தி சீரியல் ஷபானாவா இது?? ரியல் லைப்பில் எப்படி இருக்கிறார் பாருங்கள் – ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படம்!

மேலும் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் கோவாவில் மழையும் பெய்துள்ளது.

இந்தப் புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். கலக்கல் சினிமாவும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.