T-20

T-20 Match : இந்தியாவின் T 20 போட்டிக்கான அணியில் டோனியின் பெயர் இடம் பெறாததை பற்றி பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இயக்குனர், பாடலாசிரியர், நடிகர் என பன்முகத் திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன்.

இவர் இதுவரை நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், போடா போடி ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

சினிமாவை போலவே கிரிக்கெட்டிலும் அதிக ஈடுபாடு கொண்டவர் விக்னேஷ் சிவன். இன்று இந்திய கிரிக்கெட் நிர்வாகம் T-20 போட்டிக்கான அணியை அறிவித்து இருந்தனர்.

அதில் தோனியின் பெயர் இடம் பெறாதது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தற்போது இது குறித்து விக்னேஷ் சிவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கட்டாயமாக ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அந்த டீவீட்டில் T-20 போட்டிக்கு தோனி இல்லாத அணியா? அதிர்ச்சியாக உள்ளது. மோசமான நிர்வாகம் என கூறியுள்ளார். மேலும் தல தோனி இல்லாமல் ஆணியை கூட பு*****க முடியாது எனவும் கோபமாக ட்வீட் செய்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.