விக்னேஷ் சிவனுடன் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக நடிகை நயன்தாரா அறிவித்துள்ளார்.

Vignesh Shivan and Nayantha Engagement : தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவரது நடிப்பில் பல திரைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில் அடுத்ததாக நெற்றிக்கண் என்ற திரைப்படம் நேரடியாக ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.

அந்த நிகழ்வு, எனக்கு வருத்தம் அளிக்கிறது : விராட்கோலி

விக்னேஷ் சிவனுடன் ரகசியமாக நடந்து முடிந்த நிச்சயதார்த்தம் - நயன்தாரா வெளியிட்ட தகவல்.!!

இந்த படத்தின் பிரமோஷனுக்காக விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளினி டிடி தொகுத்து வழங்கியுள்ளார். வரும் ஞாயிறு காலை 10 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி இருந்தது.

அந்த வீடியோவில் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் உடன் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனைக் கேட்ட ரசிகர்கள் இது எப்போ நடந்தது? ரகசிய நிச்சயதார்த்தமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Raadhika Sarathkumar அறிமுகி 43வருடம் நிறைவை ஒட்டி Cake வெட்டி கொண்டாட்டம்..!