என் கனவு நனவானது என உச்சகட்ட மகிழ்ச்சியில் விக்னேஷ் சிவன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பாடல் ஆசிரியராக பயணத்தை தொடங்கி போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இந்த படத்தை தொடர்ந்து நானும் ரவுடி தான் என்ற படத்தை இயக்கிய போது நடிகை நயன்தாராவுடன் காதல் ஏற்பட்டு கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் இருவரும் காதலித்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர்.

மகன் கொடுத்த கிப்ட்.. என் கனவு நனவானது.. உச்சகட்ட மகிழ்ச்சியில் விக்னேஷ் சிவன் வெளியிட்ட போட்டோ.!!

இப்படியான நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் என இருவரும் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு அப்பா அம்மாவாகி இருப்பதாக அறிவித்தனர். பிறகுதான் இவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட விஷயம் தெரிய வந்தது. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் இருவரும் ஆறு வருடத்திற்கு முன்னதாகவே பதிவு திருமணம் செய்து கொண்டதாக அரசு தரப்புக்கு விளக்கம் அளித்துள்ளனர்.

மகன் கொடுத்த கிப்ட்.. என் கனவு நனவானது.. உச்சகட்ட மகிழ்ச்சியில் விக்னேஷ் சிவன் வெளியிட்ட போட்டோ.!!

சர்ச்சைகள் ஒரு பக்கம் இருந்தாலும் விக்னேஷ் சிவன் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு அது குறித்து தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது குழந்தை அவர் மீது யூரின் போன புகைப்படத்தை வெளியிட்டு கனவு நனவானது, என் மகன் என் மீது பொழிந்த அன்பு எனக் கூறி அதை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வளைய தளங்களில் வைரலாகி வருகிறது.

மகன் கொடுத்த கிப்ட்.. என் கனவு நனவானது.. உச்சகட்ட மகிழ்ச்சியில் விக்னேஷ் சிவன் வெளியிட்ட போட்டோ.!!