Vidya Balan Next Movie Update | After a long gap, she again plays a biopic film | Nerkonda Paarvai | Thala Ajith | The Dirty Picture

Vidya Balan Next Movie Update :

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

அதனால்தான் அவர் சூர்யா – உணர்ச்சிவசப்பட்ட பிரபல நடிகை!

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்படத்தில் நடிப்பதன் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன்.

இவர் எவ்வளவோ நல்ல படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு இன்றும் அடையாளமாக இருக்கும் படம் டர்ட்டி பிக்ச்சர்.

சில்க் ஸ்மிதாவின் பயோபிக் படம்தான் இது. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் மீண்டும் ஒரு பயோபிக் படத்தில் நடிக்கிறார்.

இந்த முறை கணித மேதை சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் இவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.