ஓ டி டி தளத்தில் கூடுதல் காட்சிகளுடன் வெளியாக இருக்கும் விடுதலை திரைப்படம்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 31ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இளையராஜா இசையமைப்பில் உருவாகி இருந்த இப்படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி, கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

திரையரங்குகளில் ரசிகர்களால் தொடர்ந்து வசூல் வேட்டையாடி வரும் இப்படத்தை ரஜினி உட்பட திரைபிரபலங்கள் பலரும் தொடர்ந்து பாராட்டி வரும் நிலையில் இப்படம் ஓ டி டி தளத்தில் வெளியாகும் போது கூடுதலாக 20 நிமிட காட்சிகள் சேர்க்கப்பட்டு வெளியாக இருப்பதாக புதிய தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.