
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் சூரி நாயகனாக நடிக்க விஜய் சேதுபதி மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகி உள்ள திரைப்படம் விடுதலை.

படத்தின் கதைக்களம் :
அருமபுரி என்ற காட்டில் உள்ள கனிம வளங்களை எடுத்துக் கொள்ள தனியார் நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது அரசாங்கம். இதற்கான வேலைகளில் அந்த தனியார் நிறுவனம் ஈடுபட தயாராகும் நிலையில் இங்கே கனிம வளங்களை எடுக்கக் கூடாது என மக்கள் இதனை எதிர்த்து போராடுகின்றனர். இந்தப் போராட்டத்தின் தலைவனாக விஜய் சேதுபதி இருக்கிறார்.
வழக்கம்போல போராடும் மக்களை அடக்கி ஒடுக்க வன்முறையை கையில் எடுக்கிறது போலீஸ். இரக்கமற்ற இந்த போலீஸ் அதிகாரிகளுக்கு மத்தியில் இரக்கமுள்ள கான்ஸ்டபிளாக இருக்கிறார் நடிகர் சூரி. இவர் மக்களுக்கு எப்படி உதவுகிறார் கடைசியில் இந்தப் போராட்டம் எப்படி முடிகிறது என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.
படத்தை பற்றிய அலசல் :
வெற்றிமாறன் இயக்கத்தில் மாறுபட்ட நடிப்பை கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி.
இரக்கமுள்ள போலீஸ் கான்ஸ்டபிள் ஆக மனதை நெகிழ வைக்கிறார் சூரி. இரக்கமற்ற உயர் அதிகாரியாக கௌதம் மேனன் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
பழங்குடியின பெண்ணாக அப்படியே வாழ்ந்து காட்டியுள்ளார் நடிகை பவானி.

இளைய ராஜாவின் பின்னணி இசை மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது.
வெற்றிமாறன் வழக்கமாக தன்னுடைய படங்களில் இருப்பது போல காதல், ஆக்ஷன், எமோஷன் என அனைத்தும் கலந்த படைப்பாக விடுதலை படத்தை கொடுத்துள்ளார். கூடவே டாக்குமென்ட்ரி ஃபிலிம் போல இந்த படத்தை கொண்டு சென்றுள்ளார்.