விஜய் சேதுபதியின் என்டிஆர் சூரி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை திரைப்படம் ஃபேன் இந்தியா படமாக மாறியுள்ளது.

Viduthalai Movie Release Update : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான அசுரன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்திற்காக நடிகர் தனுஷுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தினை தொடர்ந்து வெற்றிமாறன் தற்போது நடிகர் சூரியை கதாநாயகனாக வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார்.

வாத்தி விஜய் சேதுபதியால் விடுதலை படத்தில் ஏற்பட்ட மாற்றம்? சேது ரசிகர்கள் ஹாப்பி அண்ணாச்சி.!!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா ஹீரோ என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வந்தது. திடீரென இந்தப் படத்தில் விஜய்சேதுபதி மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனது படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அளவில்லாத உச்சத்திற்கு கூட்டியது.

இப்படியான நிலையில் தற்போது விடுதலை திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீசாகும் ஃபேன் இந்தியா திரைப்படமாக மாறியுள்ளது. விஜய் சேதுபதியின் வருகை விடுதலை திரைப்படத்தை இந்திய சினிமா முழுவதும் வெளியாகும் திரைப்படமாக மாற்றி உளளதாக அவரது ரசிகர்கள் கூறி கொண்டாடி வருகின்றனர்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கூட கதையின் நாயகன் சூரி வாத்தியார் விஜய் சேதுபதி என குறிக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.