வெற்றிமாறனின் விடுதலை படத்தின் இசை உரிமையை கைப்பற்றி உள்ளது பிரபல நிறுவனம்.

Viduthalai Movie Music Rights : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் இறுதியாக அசுரன் என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

வெற்றிமாறனின் விடுதலை படத்தின் இசை உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

அசுரன் படத்தைத் தொடர்ந்து தற்போது சூர்யாவை வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூரி ஹீரோவாகவும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். விடுதலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியிருந்தது.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சூரி போலீஸ் வேடத்தில் விஜய்சேதுபதி கைதியாக இருந்தார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்து இருந்தது.

மேலும் இளையராஜா இசையமைத்து வரும் இந்த படத்தின் இசை உரிமையை சோனி நிறுவனம் தற்போது கைப்பற்றியுள்ளது. விடுதலைப் படத்தை முடித்துவிட்டு வெற்றிமரன் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள வாடிவாசல் திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.