விடுதலை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியானது.

தமிழ் திரையுலகில் பிரபலம் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் தற்போது சூரி கதாநாயகனாக நடித்திருக்கும் “விடுதலை” திரைப்படத்தை இயக்கியுள்ளார். இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது.

இதில் இப்படத்தின் முதல் பாகத்திற்கான இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இளையராஜா இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் இன்று வெளியாவது குறித்த அறிவிப்பை ஏற்கனவே சிறப்பு ப்ரோமோக்களுடன் படக்குழு அறிவித்திருந்து.

அதன்படி, இளையராஜா இசையில் முதல் முறையாக நடிகர் தனுஷ் பாடி இருக்கும் ‘ஒன்னோட நடந்தா’ என்னும் பாடல் பிப்ரவரி 8 ஆம் தேதியான இன்று வெளியாகியுள்ளது. இதனை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இப்பாடல் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.