Viduthalai Movie First Look Poster

வெற்றிமாறன் இயக்கத்தில் போலீசாக சூரி நடிக்க விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Viduthalai Movie First Look Poster : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படத்தினை இயக்கி வருகிறார்.

தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் ஆகியவை வெளியாகி உள்ளது. படத்திற்கு விடுதலை என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் சூரி போலீசாக நடிப்பது தெரியவந்துள்ளது. விஜய் சேதுபதி மிரட்டலான லுக்கில் இருக்கும் போஸ்டரும் வெளியாகி உள்ளது.

சூரி கதை நாயகனாகவும் விஜய் சேதுபதி வாத்தியாராகவும் நடித்து வருவதாக படத்தை போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.