நான்கு கோடியில் இருந்து பட்ஜெட் 40 கோடியாக உயர்ந்ததை தொடர்ந்து விடுதலை பட குழு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் இதுவரை வெளியான அனைத்து படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன.

நான்கு கோடியிலிருந்து 40 கோடியாக உயர்ந்த பட்ஜெட்.. வெற்றிமாறனின் விடுதலை படக்குழு எடுத்த முடிவு - வேற லெவல் அப்டேட்.!!

இந்த படங்களைத் தொடர்ந்து தற்போது சூரியை ஹீரோவாக வைத்து விஜய் சேதுபதியை வில்லனாக வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் படத்தின் பட்ஜெட் நான்கு கோடியில் தொடங்கி 40 கோடியாக எகிறி உள்ளது.

இதன் காரணமாக தற்போது விடுதலை படக்குழுவினர் இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட முடிவு செய்துள்ளனர். மேலும் இந்த படத்தின் வெளியிட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு கோடியிலிருந்து 40 கோடியாக உயர்ந்த பட்ஜெட்.. வெற்றிமாறனின் விடுதலை படக்குழு எடுத்த முடிவு - வேற லெவல் அப்டேட்.!!

விடுதலை படத்தை முடித்த பிறகே வெற்றிமாறன் சூர்யா இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் படத்தை இயக்கத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.