விடுதலை திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

கோலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி இயக்குனராக திகழும் வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது இரண்டு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் “விடுதலை”. சூரி, விஜய் சேதுபதி, கௌதம் மேனன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

இளையராஜா இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பை படக்குழு அதிகாரவபூர்வமாக வெளியிட்டுள்ளது.

அதன்படி இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இம்மாதம் வரும் 8 ஆம் தேதி நடைபெற இருப்பதாக புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் படத்தின் மற்ற பாடல்களை கேட்க ரசிகர்கள் ஆர்வத்துடன் இந்நிகழ்ச்சிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.