Vidya Balan

Vidhya Balan : 40 வயதுக்கு மேல தான் அந்த ஆசையே எனக்கு அதிகமாச்சு என கூறி அதிர்ச்சியை கிளப்பியுள்ளார் அஜித் பட நாயகி.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் விஸ்வாசம் படத்தை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள பிங்க் படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி ஷ்ரத்தா ஸ்ரீநாத்திற்காக காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்த படத்தில் அஜித்தின் நாயகியாக கெஸ்ட் ரோலில் பாலிவுட் நடிகையான வித்யா பாலன் நடிக்க உள்ளார். இந்த படத்தின் மூலமாக முதல் முதலாக தமிழில் அறிமுகமாக உள்ளார் வித்யா பாலன்.

இந்நிலையில் இவர் தற்போது பாலிவுட் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் எனக்கு 40 வயதிற்கு மேல் தான் காமத்தின் மீதான ஆசை அதிகமானது என கூறி அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

சமீபத்தில் 40 வயது பிறந்த நாளை கொண்டாடிய வித்யா பாலன் செய்தியாளர்களை சந்தித்த போது 40 வயதாகியும் இளமையாக இருப்பதாக உணர்கிறீர்களா என கேட்டனர்.

அதற்கு அவர் 40 வயதிற்கு மேல் தான் நான் இளமையாகவும் அழகாகவும் கவர்ச்சியாகவும் உணர்கிறேன். 40 வயதிற்கு பிறகு பெண்களுக்கு அழகு இருக்காது, காமத்தின் மீதும் ஈடுபாடு குறைந்து விடும் என்பதெல்லாம் ஒரு கட்டு கதையே என கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் என்னுடைய உடல் எடையை பார்த்து யாரவது உடற்பயிற்சி செய்ய கூறினால் கெட்ட வார்த்தை தான் வரும் என கூறியுள்ளார்.

மேலும் சிறிய வயதில் இருந்தே ஹோர்மோன் பிரச்சனையால் தான் என்ன தான் உடற்பயிற்சி செய்தாலும் உடல் எடை அதிகரித்து கொண்டே தான் இருக்கும் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.