நடிகை நித்யா மேனன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தற்போது டாப் ஹீரோயின்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை நித்யா மேனன். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தின் மூலம் பல ரசிகர்களின் மனதில் ஆழமாக இடம் பிடித்த இவர் தற்போது பலமொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

பள்ளியில் இங்கிலீஷ் டீச்சராக மாறிய நித்யா மேனன்!!… மகிழ்ச்சியுடன் பதிவிட்ட வீடியோ வைரல்.!

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்ட நித்யா மேனன் படப்பிடிப்பு முடிந்த பின்னர் அங்குள்ள அரசு பள்ளிகளில் பயின்று வரும் குழந்தைகளுடன் உரையாடி இருக்கிறார். மேலும் அங்குள்ள ஒரு கிளாஸ் ரூமில் குழந்தைகளுக்கு ஆங்கில பாடத்தை புரியும்படி கற்றுக் கொடுத்துள்ளார்.

பள்ளியில் இங்கிலீஷ் டீச்சராக மாறிய நித்யா மேனன்!!… மகிழ்ச்சியுடன் பதிவிட்ட வீடியோ வைரல்.!

இது குறித்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட நித்யா மேனன், கிருஷ்ணாபுரம் கிராமத்தில் பள்ளியில் பயிலும் சிறு குழந்தைகளுடன் இது எனது புத்தாண்டு. கிராமத்தில் உள்ள குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாகவும், குழந்தைத்தனமாகவும் இருக்கிறார்கள். அவர்களைச் சுற்றி நான் எப்போதும் ஒரு பெரிய நம்பிக்கையை உணர்கிறேன். என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.