நடிகை ஸ்ரீதேவி சென்னையில் வாங்கி உள்ள முதல் வீட்டை அவரது மகள் ஜான்வி கபூர் நெகிழ்ச்சியுடன் சுற்றி காட்டி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தென்னிந்திய திரை உலகில் 80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் பிரபல தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர்.

சென்னையில் நடிகை ஸ்ரீதேவி வாங்கிய முதல் வீடு!!… நெகிழ்ச்சியுடன் சுற்றி காட்டிய ஜான்வி கபூரின் வீடியோ வைரல்!!.

இதில் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அவர் தற்போது தனது அம்மாவான மறைந்த நடிகை ஸ்ரீதேவி சென்னையில் வாங்கி முதல் வீட்டை Vogue பத்திரிக்கைக்கு சுற்றி காட்டியிருக்கிறார். மாளிகை போல் காட்சியளிக்கும் அந்த வீட்டுடன் நடிகை ஸ்ரீதேவிக்கு இருக்கும் நெருக்கமான உறவைப் பற்றியும் பத்திரிக்கையாளர்களிடம் நடிகை ஜான்வி கபூர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து இருக்கிறார். அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.