vidamuyarchi movie shooting wrapped
vidamuyarchi movie shooting wrapped

விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற படம் வெளியாக உள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்திலும் லைக்கா நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ்,அர்ஜுன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு இருந்தது. இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருந்த நிலையில் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது.

இந்த தகவலால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்தப் படத்தின் மீதான எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.