புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்ட விடாமுயற்சி படக்குழு.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்திலும், லைகா நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் திரிஷா கிருஷ்ணன் ,அர்ஜுன் சர்ஜா,நிகில் நாயர், ரெஜினா போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படம் அக்டோபர் 31ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படம் குறித்த போஸ்டர்கள் பட குழு வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் நிகில் நாயர் மிரட்டல் ஆன லுக்கில் இருக்கும் போஸ்டரை வெளியிட்டு உள்ளது. இந்த போஸ்டர் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
இதற்கு முன்னர் ஆரவ் போஸ்டர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.