விடாமுயற்சி படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற படம் வெளியாக உள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்திலும் லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார்.
இந்தப் படத்திற்கான அப்டேட் இன்று வெளியாகும் என்று அஜித்குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா சொல்லி இருந்தார்.அந்த வகையில் இந்த படத்தில் நடித்துள்ள பிக் பாஸ் ஆரவ்வின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு இன்று வெளியிட்டு உள்ளது.
அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு படக்குழு இந்த போஸ்டரை வெளியிட்டு உள்ளது. இந்த போஸ்டர் வெளியாகி இணையத்தில் மாஸ் காட்டி வருகிறது.
பொதுவாகவே முன்னணி பிரபலங்களுக்கு மட்டுமே போஸ்டர் அப்டேட் வெளியாகும். ஆனால் சக கலைஞர்களுக்கும் கொடுக்கும் மரியாதையை பார்த்து அஜித் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இதேபோல் துணிவு படத்திலும் வெளியானது குறிப்பிடத்தக்கது.