விடாமுயற்சி படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
மேலும் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே விடா முயற்சி பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகளும் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளதால் இதுவும் பொங்கலுக்கு வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது. இந்த இரண்டில் நீங்க எந்த படத்துக்காக வெயிட் பண்றீங்க என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.