விடாமுயற்சி திரைப்படத்தின் புதிய தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது.

துணிவு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அஜித் தனது அடுத்த படமாக “விடாமுயற்சி” திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாக இருக்கும் இப்படத்தின் போஸ்டர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி வைரலானதை தொடர்ந்து தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி, நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு மே கடைசி வாரத்தில் தொடங்க இருப்பதாகவும் இப்படத்தின் படப்பிடிப்பை
படக்குழு நவம்பர் மாதத்திற்குள் முடிக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படம் வரும் 2024 ஆம் ஆண்டு சம்மர் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வைரலாகி வருகிறது.