நயன்தாராவுக்கு நெற்றியில் முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள விக்னேஷ் சிவன்.
Vicky Kisses to Nayanthara : தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் வல்லவன் படத்தில் நடித்த போது சிம்புவை காதலித்தார். அதன் பின்னர் விஜய்யுடன் வில்லு படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனரான பிரபுதேவாவை காதலித்தார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த இரண்டு காதலும் நயன்தாராவிற்கு தோல்வியை கொடுத்தது. இதனையடுத்து நயன்தாரா நானும் ரவுடிதான் படத்தில் நடிக்கும் போது அப்படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவனுடன் காதல் வலையில் வீழ்ந்தார்.
தற்போது வரை இவர்கள் இருவரும் தங்களது காதலை தொடர்ந்து வருகின்றனர். அடிக்கடி இருவரும் சேர்ந்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
விடுமுறை கிடைக்கும் போதெல்லாம் வெளி நாட்டுக்கு விசிட் அடித்து விடுகின்றனர்.
தற்போது ஊரடங்கால் வீட்டில் இருக்கும் இருவரும் ஒன்றாக நேரத்தை கழித்து வருகின்றனர். தற்போது விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக இருவரும் குழந்தை போல் மாறி இருந்த வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தனர்.