Vicky About Rumours with Meghna
Vicky About Rumours with Meghna

பொன்மகள் வந்தாள் மேக்னா உடன் திருமணம் நடக்க இருப்பதாக வெளியான தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ளார் நடிகர் விக்கி.

Vicky About Rumours with Meghna : சின்னத்திரையின் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்று பொன் மகள் வந்தாள்.

இந்த சீரியலில் விக்கி மற்றும் மேக்னா ஆகியோர் ஜோடி சேர்ந்து நடித்து வருகின்றனர். சீரியல்களில் ஜோடியாக நடித்து வருபவர்கள் திருமணம் செய்து கொள்வது வழக்கமாகி வருகிறது.

ராணாவின் தம்பியின் அந்தரங்கத்தை வெளியிட்ட ஸ்ரீரெட்டி தற்போது ராணா திருமணம் குறித்து என்ன சொல்லி இருக்கார் பாருங்க – ஆதாரத்துடன் இதோ!

இதனால் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக பலமுறை வதந்திகள் பரவி வந்தன. மேக்னாவும் அவரது கணவரை விவாகரத்து செய்து இருந்தார்.

இந்த நிலையில் நடிகர் விக்கி எங்களைப் பற்றி நிறைய வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றது. நாங்கள் சீரியலில் இணைந்து நடிக்கிறோம் அவ்வளவு தான்.

ஏற்கனவே எனக்கு திருமணமாகி பத்து வயதில் ஒரு மகன் உள்ளான். அவனது எதிர்காலம் எனக்கு முக்கியம். எனது குடும்பத்திலும் பிரச்சினை இருக்கிறது ஆனால் அதனை நாங்கள் சமாளித்துக் கொள்வோம். தயவு செய்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.