Thiruneeru

திருநீறு இல்லாத நெற்றியும், நெய் சேர்க்காத உணவும் வீண் என்கிறார் அவ்வையார். திருநீறுக்கு விபூதி என்று ஒரு பெயர் உண்டு.

இந்துக்கள் ஒவ்வொருவரும் கடவுளை வணங்குவது அடையாளமாகத்தான் திருநீறு இட்டுக் கொள்கிறோம்.

திருநீறு பூசுவதால் ஐஸ்வர்யம் கிட்டும் என்பது நம்பிக்கை. அதனால்தான் முன்னோர்கள் நீறில்லா நெற்றி பாழ் என்று கூறி உள்ளார்கள்.

☆ எந்த விரலால் விபூதியை தொடுவது நன்மை தரும்!

கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும் போது அங்கே அர்ச்சகர் நமக்கு விபூதியும், குங்குமமும் அளிப்பார்.

அப்படி அளிக்கப்படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும் போது. நாம் அதை எப்படி, எந்தெந்த விரல்களால் எடுத்து நெற்றியில் இடுகிறோம் என்பதை நம்மில் பலருக்கும் தெரிவதில்லை.

☆ விபூதியை எடுக்க சில விரல்களை பயன்படுத்தும்போதும் தீமையும் சில விரல்களை பயன்படுத்தும் போது அதீத நன்மைகளும் ஏற்படும்.

ஆகவே வீபூதியை எடுக்கும் போது கீழே குறிப்பிட்டுள்ள வரிகளில் உள்ள முறைகளை பயன்படுத்தி மிகவும் கவனமாக எடுத்து அணிய வேண்டும்.

♧ கட்டை விரல் –கட்டை விரலால் விபூதியை தொட்டு அணிந்தால், தீராத வியாதி வரும்.

♧ ஆள்காட்டி விரல் — ஆள்காட்டி விரலால் விபூதியை தொட்டு அணிந்தால், பொருட்கள் நாசம்.

♧ நடுவிரல் — நடுவிரலால் விபூதியை தொட்டு அணிந்தால், நிம்மதியின்மை.

♧ மோதிர விரல் — மோதிர விரலால் விபூதியை தொட்டுக்கொண்டு அணிந்தால், மகிழ்ச்சியான வாழ்க்கை.

♧ சுண்டு விரல் — சுண்டு விரலால் விபூதியை தொட்டு அணிந்தால், கிரகதோஷம் எற்படும்.

♧ மோதிர விரல் — கட்டை விரல்:
மோதிர விரலாலும் கட்டை விரலாலும் சேர்த்து விபூதியை எடுத்து, மோதிர விரலால் விபூதியை இட்டுக் கொண்டால் உலகமே வசப்படும். எடுக்கும் முயற்சி வெற்றி பெறும்.

☆ விபூதி அணியும் முறை:

வடதிசை அல்லது கிழக்கு திசையையாவது நோக்கி நின்றுகொண்டு, கீழே சிந்தாமல், வலது கையின் ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களால் திருநீறை எடுத்து அண்ணாந்து நின்று, பூசிக்கொள்ளல் வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here