வேட்டையன் படத்தில் துஷாரா விஜயன் கதாபாத்திரத்தை படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. த.செ ஞானவேல் இயக்கத்திலும், லைக்கா ப்ரொடக்சன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், அமிதாப்பச்சன், ரித்திகா சிங், பகத் பாசில் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர் அக்டோபர் 10ஆம் தேதி இந்த படம் திரைக்கு வரும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை பட குழு அறிவித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து சமீபத்தில் இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் இருபதாம் தேதி நடக்கும் என்றும் வெளியானது. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்குவதை ஒட்டி பட குழு படத்தில் நடித்த கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யும் வீடியோவை வெளியிட்டு வருகிறது.
அதில் தற்போது துஷாரா விஜயன் கதாபாத்திரம் குறித்த பதிவில், துணிச்சல் மற்றும் தைரியத்துடன் வேட்டையன் படத்தில் சரண்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக வீடியோ மூலம் பதிவை பட குழு வெளியிட்டுள்ளது.
இணையத்தில் இந்த வீடியோ வெளியாகி தெறிக்க விட்டு வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.