வேட்டையன் படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ஞானவேல் இயக்கத்தில், லைகா தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
மேலும் மஞ்சு வாரியர், அபிராமி, துஷாரா, ரித்திகா சிங், பகத் பாசில், அமிதாப் பச்சன், ராணா, கிஷோர் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என்பதை பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில் தற்போது ரஜினிகாந்த் இன்று இந்த படத்தின் டப்பிங் பணியை தொடங்கியுள்ளார். இது குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் கூலி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.