வேட்டையன் படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. தா.செ ஞானவேல் இயக்கத்திலும், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
மேலும் அமிதாப்பச்சன் ,பகத் பாஸில் , ராணா டகுபதி, மஞ்சு வாரியார், ரித்திகா சிங் போன்ற பல முன்னணி பிரபலங்கள் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இந்த படத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிளான “மனசிலாயோ”என்ற பாடல் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் செகண்ட் சிங்கிள் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என்ற தகவலும் கசிந்துள்ளது.
முக்கிய குறிப்பாக இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் இரண்டாம் தேதி நடக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம். இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டாரின் குட்டிக்கதைக்காகவே பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.