வேட்டையன் படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக உள்ளது.

த.செ ஞானவேல் இயக்கத்திலும்,லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், பகத் பாசில், ரானா டகுபதி ,மஞ்சு வாரியார், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்திற்கான முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. அதில் இந்தப் படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் செம ஹேப்பியில் இருப்பதாகவும், படம் செம்மயாக வந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இது மட்டுமில்லாமல் பகத் பாசில் ட்ராக் காமெடி வேற லெவலில் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.