வேட்டையன் படத்தின் கிளைமாக்ஸ் குறித்து பேசியுள்ளார் கலைய இயக்குனர் கதிர்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் அக்டோபர் பத்தாம் தேதி வெளியாக உள்ளது.
த.செ ஞானவேல் இயக்கத்திலும், லைகா ப்ரோடக்ஷன் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
மேலும் துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், அமிதாப்பச்சன், அபிராமி, பகத் பாசில் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தின் சுவாரசிய தகவல் ஒன்றை கல இயக்குனர் கதிர் கூறியுள்ளார்.
அதில், இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் ரொம்ப நல்லா வந்திருக்கு, சண்டை எல்லாம் தாண்டி வேறுவிதமான கிளைமேக்ஸ் காட்சியை நீங்கள் பார்ப்பீர்கள் என்று கூறியுள்ளார் இது மட்டும் இல்லாமல் படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இவர் சொன்ன தகவலால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் எக்கச்சக்கமாக அதிகரித்து இருக்கிறது என்று சொல்லலாம்.