வேட்டையன் படத்தில் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
த. செ.ஞானவேல் இயக்கத்திலும், லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் ராணா டகுபதி, ரித்திகா சிங், மஞ்சு வாரியார்,துஷாரா விஜயன், பகத் பாஸில், அமிதாபச்சன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் இந்த படத்துடன் சூர்யாவின் கங்குவா மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு விருந்தாக படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் செப்டம்பர் 20ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கப் போவதாக தகவல் கசிந்துள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை ஒரு திறந்து பார்க்கலாம்.