vettaiyan movie audio launch official announcement
vettaiyan movie audio launch official announcement

வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படகுழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. த.செ ஞானவேல் இயக்கத்திலும், லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுளை இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

மேலும் துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங், அமிதாப்பச்சன் போன்ற முன்னணி பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு விருந்தாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை செப்டம்பர் 20ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஆறு மணிக்கு தொடங்கும் என்ற தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தத் தகவலால் ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.