பகத் பாசிலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள வேட்டையன் படக்குழு.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
இயக்குனர் ஞானவேல் இயக்கத்திலும், லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகிவரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
முக்கிய வேடத்தில் அமிதாப்பச்சன் , பகத் பாஸில், மஞ்சு வாரியர், ரானா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் போன்ற பிரபலங்கள் நடக்கின்றன.
ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் நடித்திருக்கும் பஹத் பாசிலின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக படக்குழு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது
அந்தப் புகைப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் நடுவில் பகத் பாசில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.