கமல் கௌதம் மேனன் கூட்டணியில் வேட்டையாடு விளையாடு 2 படத்தில் நாயகியாக நடிக்கப் போவது யார் என்பது குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.
Vettaiyadu Vilaiyadu 2 Heroine : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான கௌதம்மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் வேட்டையாடு விளையாடு.
சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் அப்படத்திற்கு வேட்டையாடு விளையாடு 2 என டைட்டில் வைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
மேலும் ஐசரி கணேஷ் தயாரிக்க இருப்பதாக கூறப்படும் இந்த படத்தில் நாயகியாக நடிகை அனுஷ்கா நடிக்கலாம் என தற்போது தகவல்கள் கசிந்துள்ளன.