விடுதலை படக்குழுவினருக்கு இயக்குனர் வெற்றிமாறன் கொடுத்திருக்கும் அன்பளிப்பு குறித்த தகவல் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் தற்போது விடுதலை திரைப்படத்தை இயக்கியுள்ளார். சூரி, விஜய் சேதுபதி, கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் படம் வரும் 31ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் படக்குழுவினருக்கு திடீரென்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அதாவது உதவி இயக்குனர் உட்பட 25 நபர்களுக்கு செங்கல்பட்டு அருகே ஆளுக்கு ஒரு கிரவுண்ட் நிலத்தை வாங்கி அன்பு பரிசாக கொடுத்துள்ளார். இதனை அவர் சத்தம் இன்றி செய்ய முயன்று இருக்கிறார். ஆனால் படக்குழுவினர் அனைவரும் இதனை ஒரு நிகழ்ச்சியாக நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். இதனால் இயக்குனர் பாரதிராஜா முன்னிலையில் இந்நிகழ்ச்சி விரைவில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.