வெற்றிமாறனின் அடுத்த படம் குறித்து பல தகவல்கள் பரவி வந்த நிலையில் தற்போது உறுதியான தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான வெற்றிமாறன் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார். இறுதியாக தனுஷை வைத்து இயக்கிய அசுரன் திரைப்படம் அசுர வெற்றி பெற்றது.
இதனையடுத்து வெற்றிமாறன் தளபதி விஜயை இயக்க போவதாகவும் சூர்யாவை இயக்க போவதாகவும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தொடர்ந்து பல தகவல்கள் பரவி வந்தன.
ஆனால் உண்மையில் வெற்றிமாறன் அடுத்ததாக சூரியை தான் இயக்க போகிறாராம். இந்த படத்தின் படப்பிடிப்புகள் வெளிநாடுகளில் நடைபெற உள்ளதாம்.
இந்த படத்திற்கு பிறகு வேண்டுமானால் வெற்றிமாறன் சூரியாவையோ, விஜயையோ இயக்க வாய்ப்பிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.