Vetrimaaran to join hands with Genius Roshan : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Vetrimaaran to join hands with Genius Roshan :

வெற்றிமாறன் அடுத்ததாக தயாரிக்கும் படத்தை பற்றிய ஒரு புதிய தகவல் தற்போது கிடைத்துள்ளது

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் அசுரன். கொடி படத்தை தொடர்ந்து இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். பூமணியின் வெக்கை எனும் நாவலை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவின் பிஸி நடிகரான ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அண்மையில் நிறைவுக்கு வந்தது.

இதைதொடர்ந்து பின் தயாரிப்பு வேலைகளையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி விடுமுறையில் வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது.

பிக் பாஸ் தொடங்கும் நேரத்தில் ஓவியா ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி!

இது ஒரு பக்கமிருக்க வெற்றிமாறன் அடுத்ததாக தயாரிக்கும் படத்தை பற்றிய ஒரு புதிய தகவல் தற்போது கிடைத்துள்ளது.

இப்படத்தில் ஜீனியஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ரோஷன் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். இப்படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்த தகவலை விரைவில் அறிவிக்க உள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.