VETRILAI POONDU RASAM : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Dinner Ideas, Easy Recipe

VETRILAI RASAM :

தேவையான பொருட்கள் :

வெற்றிலை – 6,
புளி – எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
பழுத்த தக்காளி – 2,
தனியாத்தூள் – 1 டீஸ்பூன்,
மிளகு – 1 டீஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன், துவரம்பருப்பு – 1 டீஸ்பூன்,
(வேக வைத்து நீர் விட்டு கரைக்கவும்) எண்ணெய் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை;

1) தக்காளி, வெற்றிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

தலைமுடி உதிர்வா? அடர்த்தியாக முடி வளர வேண்டுமா? இதோ ஈசியான ஒரு மூலிகை தேங்காய் எண்ணெய் குறிப்பு.!

2) புளியை நீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.

3) கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து தாளித்து, நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.

4) வதங்கியதும் மஞ்சள் தூள், உப்பு, புளிக்கரைசல், உப்பு, தண்ணீர் விட்டு கொதிக்க விடவேண்டும்.

5) நெய்யில் தனியா தூள், மிளகு, சீரகப் பொடியை வறுத்து கொதிக்கும் ரசத்தில் சேர்த்து இறக்க வேண்டும்.

6) உடனடியாக நறுக்கிய வெற்றிலையை போட்டு மூடிவிட வேண்டும்.

7) 15 நிமிடத்திற்கு பிறகு பரிமாறினால் சுவையான வெற்றிலை ரசம் ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here