Verithanam Song Record in YouTube
Verithanam Song Record in YouTube

தளபதி விஜயின் வெறித்தனம் பாடல் வெகு விரைவில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடக்க உள்ளது.

Verithanam Song Record in YouTube : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் ஊரடங்கி முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்ட உடன் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்திலிருந்து வெளியாகியுள்ள பாடல்கள் யூட்யூபில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றன.

இந்த நிலையில் அட்லி இயக்கத்தில் வெளியாகி இருந்த பிகில் படத்தில் தளபதி விஜய் பாடியிருந்த வெறித்தனம் பாடல் யூடியூபில் 94 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

கூடிய விரைவில் இப்பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று விடும் என ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் இது குறித்த கொண்டாட்டத்துடன் அவர்கள் இறங்கியுள்ளனர்.

அதேபோல் தளபதி விஜயின் மாஸ்டர் இசை வெளியீட்டு விழா பேச்சு 14 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.