
Viswasam Teaser : தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் ரசிகர்கள் உருவாக்கிய டீஸர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித். இவர் தற்போது வீரம், வேதாளம், விவேகம் படங்களை இயக்கி இருந்த சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார்.
பொங்கலுக்கு வெளியாக உள்ள இப்படத்தின் டீசருக்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது ரசிகர்கள் சேர்ந்து உருவாக்கியுள்ள விஸ்வாசம் படத்தின் டீஸர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் வேற லெவல், வெறித்தனம் என கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.
இன்று வெளியாக இருந்த விஸ்வாசம் படத்தின் அப்டேட் கஜா புயல் பாதிப்பால் தள்ளி போயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Kickass Fan Made Teaser of #Viswasam ????
Kudos to the Editor!! ???? #ViswasamFanMadeTeaser pic.twitter.com/d4tPXTDmmT
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) November 21, 2018