Vendhaya Keerai

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – 1 கப், வெந்தயக்கீரை – 1 கட்டு,
சீரகம் – 1/2 டீஸ்பூன், சோம்பு – 1/4 டீஸ்பூன், தனியாத்தூள் – 1/2 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – சிறிதளவு, மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன், கொத்தமல்லித் தழை – சிறிதளவு,
உப்பு – சிறிதளவு,
கெட்டித்தயிர் – 1 டீஸ்பூன்,
வெண்ணெய் – தேவைப்பட்டால்.

செய்முறை:

1) வெந்தயக் கீரையை சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், சோம்பு போட்டு தாளிக்கவும்.
2) பின்னர் சுத்தம் செய்த வெந்தயக் கீரையை போட்டு பிரட்டவும். தனியாத்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு ஒரு முறை வதக்கவும்.
3) கொத்தமல்லி தழையை சேர்த்து கிளறி விட்டு இறக்கி வைக்கவும்.
4) ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்துக் கொண்டு, அதில் வதக்கி வைத்திருக்கும் வெந்தயக் கீரை மசாலாவை போட்டு கலக்கவும்.
5) பின்னர் அதனுடன் வெண்ணெய், தயிர், உப்பு போட்டு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து சப்பாத்தியாக சுடவும்.
6) ஆரோக்கியம் நிறைந்த வெந்தயகீரை சப்பாத்தி ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here