சாய் அற்புதம் சினிமாஸ் தயாரிப்பில் செல்வசேகரன் இசையில் விக்ராந்த், பசுபதி, அர்த்தனா பினு , சூரி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் வெண்ணிலா கபடி குழு.

Vennila Kabadi Kuzhu 2 Review :

படத்தின் கதைக்களம் :

பஸ் டிரைவரான பசுபதி ஒரு தீவிர கபடி ரசிகர் மட்டுமல்ல விளையாட்டு வீரரும் கூட. இவரது சொந்த ஊரில் கபடி விளையாட்டு தொடர்பாக நடந்த பிரச்னைனால் ஊரை விட்டு வெளியேறி கொடைக்கானலில் செட்டிலாகி விடுகிறார்.

கபடி போட்டி எங்கு நடந்தாலும் வேலையை கூட விட்டு விட்டு சென்று விடுவதால் பசுபதியிடம் இருந்த ட்ரைவர் வேலையும் பறி போய் விடுகிறது. இதனால் கபடியே பிடிக்காத அவரது மகன் விக்ராந்த்தே அப்பாவை ஏளனமாக பார்க்கிறார்.

அதன் பின்னர் விக்ராந்தின் அம்மா பசுபதியை பற்றிய வரலாற்றை சொல்ல அதன் பின்னர் கபடி மீது ஆர்வம் கொண்டு ஊருக்கு செல்கிறார் விக்ராந்த். அதன் பின்னர் அவர் அங்கு என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்? கபாடியில் ஜெயித்தாரா இல்லையா? என்பது தான் மீதி கதையும் களமும்.

படத்தை பற்றிய அலசல் :

நடிகர் நடிகையின் நடிப்பு :

பாதி கதையை பசுபதி தாங்கி செல்ல மீதி கதையை விக்ராந்த் தாங்கி செல்கிறார். இருவரின் நடிப்பும் படத்திற்கு பலம்.

நாயகி அர்த்தனா பினு விக்ராந்துடன் டூயட் பாடவும் அவரை பார்த்து சிரிப்பதோடு அவரது கதாபாத்திரம் முடிந்து விடுகிறது.

கிஷோர் அவருடைய கதாபாத்திரத்தை கனகச்சிதமாக நடித்து கொடுத்துள்ளார்.

தொழில்நுட்பம் :

இசை :

செல்வ கணேஷின் பின்னணி இசை பிரமாதம், ஆனால் பாடல்கள் தான் மனதை கவர மறுக்கின்றன.

ஒளிப்பதிவு :

கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் அழகை சேர்த்துள்ளது. குற்றாலம் முதல் கிராமம் வரை அழகாக படம் பிடித்துள்ளார்.

இயக்கம் :

செல்வ சேகரனின் பசுபதியின் கிளைமேக்ஸ் காட்சிகளால் நம்மை கலங்க வைத்து விடுகிறார். 10 வருடத்திற்கு பின்பு மீண்டும் நமது பாரம்பரிய விளையாட்டான கபடியை நினைவுபடுத்தி இருப்பது சிறப்பு.

தம்ப்ஸ் அப் :

1. பசுபதி நடிப்பு
2. விக்ராந்தின் நடிப்பு
3. ஒளிப்பதிவு
4. கிளைமாக்ஸ் காட்சி

தம்ப்ஸ் டவுன் : 

1. வழக்கமான லாஜிக்கல் தவறுகள்
2. விறுவிறுப்பை கொஞ்சம் கூட்டி இருக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here