குக் வித் கோமாளிலிருந்து மணிமேகலை வெளியேற வெங்கடேஷ் பட் உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் நான்காம் சீசன் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

இதில் கோமாளிகளில் ஒருவராக பங்கேற்று வந்த மணிமேகலை திடீரென நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். நிகழ்ச்சியில் இருந்து வெளியேற என்ன காரணம் என தற்போது வரை எந்தவித காரணத்தையும் தெரிவிக்கவில்லை.

மணிமேகலையின் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் செஃப் வெங்கடேஷ் பட் மணிமேகலை குறித்து உருக்கமாக பதிவு செய்துள்ளார். பர்பாமராக வாழ்பவதற்காகவே பிறந்தவர் மணிமேகலை. அவருடைய பர்பாமன்ஸ் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

குக் வித் கோமாளி செட்டில் எனக்கும் அவருக்கும் இடையே இறையே அழகான தருணங்கள் இருக்கின்றன. என் வாழ்க்கையில் நான் பார்த்த மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவர் மணிமேகலை என பதிவு செய்து அவரது அடுத்த கட்ட வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வெங்கடேஷ் பட் அவர்களின் பதிவுக்கு மணிமேகலை நன்றி தெரிவித்து நான் சிறந்த மோட்டிவேஷனல் நபராக உங்களைப் பார்த்ததாக தெரிவித்துள்ளார்.